பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு – பாரதிராஜா கடும் சோகம்

21

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் நிவாஸ். மிக சிறந்த ஒளிப்பதிவாளர் ஆன இவரது ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்.

பாரதிராஜாவின் படங்களில் வரும் அழகிய கிராமங்களை அழகான காட்சிப்படுத்தலில் முக்கிய பங்கு இவருக்குண்டு.

அவரின் முதல் படமான 16 வயதினிலே தொடங்கி புதிய வார்ப்புகள் என பல படங்களில் நிவாஸ் பணியாற்றினார்.

பாரதிராஜாவையே ஹீரோவாக வைத்து கல்லுக்குள் ஈரம் படத்தை இயக்கினார். மேலும் எனக்காக காத்திரு,நிழல் தேடும் நெஞ்சங்கள், கடைசியாக 1993ல் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அவர்களின் மகன் சந்தனப்பாண்டியனை வைத்து செவ்வந்தி படத்தை இயக்கினார்.

சலங்கை ஒலி படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் நந்தி அவார்டுகளையும் வாங்கியுள்ளார்.

ராமராஜன் நடித்த செண்பகமே செண்பகமே, ஊரு விட்டு ஊரு வந்து உள்ளிட்ட படங்களில் தரமான ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படி பல சாதனைகள் புரிந்த நிவாஸ் சொந்த மாநிலமான கேரளாவில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் இவர் மரணமடைந்தார். இவரின் மரணத்திற்கு இயக்குனர் பாரதிராஜா கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க பாரதிராஜா உட்பட பலரும் எதிர்ப்பு