பாரதிராஜாவை பார்த்து கண்கலங்கிய என் உயிர்த்தோழன் பாபு

54

இயக்குனர் பாரதிராஜா இயக்கி 1990ல் வெளிவந்த திரைப்படம் என் உயிர்த்தோழன். இத்திரைப்படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பாபு. இப்படத்தில் இவர் மிக மிக சிறப்பாக நடித்திருந்தார்.

ஒரு படத்திலேயே அனைத்து நடிகர்களையும் தூக்கி சாப்பிடும் அளவு மிக அழகாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவே, ஒரு கட்டத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஆர்வம் காரணமாக ஒரு சண்டைக்காட்சியில் தானே நடிக்கிறேன் என டூப் இல்லாமல் அவரே மேலே இருந்து குதிக்க ஸ்பைனல் கார்டில் அடிபட்டு மிகுந்த கவலைக்கிடமாக ஆனார்.

பல வருடங்களாக படுக்கையில் மட்டுமே கிடக்கிறார். எழுந்து நடக்க முடியாத நிலை. மிகச்சிறந்த நடிகராக வளர்ந்து தமிழ்சினிமா நடிகர் இப்படி படுக்கையிலேயே 25 வருடமாக கிடப்பது சினிமா ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது.

நேற்று இவரை இயக்குனர் பாரதிராஜா சென்று பார்த்தபோது அவர் கண்கலங்கி பேசியது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

பாருங்க:  காலம் ஒரு துரோகி... ‘ராக்கி’ டிரெய்லர் வீடியோ...