பிரபல தயாரிப்பாளர், இயக்குனர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் காரைக்குடி நாராயணன். இவர் இயக்கிய அன்பே சங்கீதா, அச்சாணி, மீனாட்சி குங்குமம் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றவை.
குறிப்பாக அச்சாணி திரைப்படம் மிக அருமையாக வந்த திரைப்படம் இதில் இளையராஜா இசையமைப்பில் வந்த தாலாட்டு பிள்ளை ஒன்று , மாதா உன் கோவிலில் பாடலும் மிகுந்த வரவேற்பை அந்தக்காலங்களில் பெற்றது.
இளையராஜாவுடன் ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்றியவர். இளையராஜாவுடன் நல்ல நட்புடன் இன்றுவரை இருப்பவர். சில வருடங்கள் முன்பு கூட காரைக்குடி நாராயணனை அழைத்து உங்கள் மகளை அழைத்து வாருங்கள் சிறுவயதில் பார்த்தது என கூறி பழைய நினைவுகளை அசைபோட்டு பேசினாராம்.
இயக்குனர் பாரதிராஜாவோடு மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்திருக்கிறார். காரைக்குடி நாராயணன். வாய்ப்பு தேடிய காலங்களில் ரூம் மெட்டாகவும் பாரதிராஜா இருந்துள்ளார்.
காரைக்குடி நாராயணனுக்கு சில படங்கள் வெளிவரவும் பாரதிராஜா உதவி புரிந்திருக்கிறார். அந்தக்காலத்தில் பாரதிராஜாவை தொடர்புகொள்ள முடியாத நிலையில் காரைக்குடி நாராயணன் அவர்கள் தனது வீட்டு டெலிஃபோனை பயன்படுத்திக்கொள்ள சொன்னாராம்.
அக்காலத்தில் குமுதம் பத்திரிக்கையில் காரைக்குடி நாராயணன் வீட்டுக்கு ஃபோன் செய்தால் பாரதிராஜா பேசுவார் என எழுதி இருந்தார்களாம்.
இப்படி நெருங்கிய நட்புடன் திகழ்ந்த பாரதிராஜாவை இயக்குனர் காரைக்குடி நாராயணன் பார்த்தே 30 வருடங்கள் ஆகிவிட்டதாம் . இவர்களுக்குள் எந்த பிரச்சினையோ பிணக்கோ இல்லை இருப்பினும் 30 வருடம் ஒரு நெருங்கிய நண்பரை யதார்த்தமாக பார்க்காமல் இருப்பதே மிகப்பெரும் ஆச்சரியம்தான்.
இதை பிரபல சேனலான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குனர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.