விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் ஒரு பெண் வயிற்றில் பிள்ளையோடு ஆதரவின்றி நடந்து கொண்டே இருப்பது போல் ஒரு காட்சி வரும். அந்த காட்சியை வைத்து நெட்டிசன்கள் இரண்டு மூன்று நாட்களாக கலாய்த்து தள்ளிவிட்டார்கள்.
அந்த பெண் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட், கனடா அமெரிக்கா , விண்வெளி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதாய் அந்த சீரியலை மரண கலாய் கலாய்த்து விட்டனர்.
இந்த நிலையில் திமுகவின் ஆ.ராசா நேற்று ஒரு பெரம்பலூரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது திமுகவை சேர்ந்த ஒருவர் கத்தினார் என்பதற்காக அந்த நாயை வெளிய தூக்கி போடுங்க என்று பேசினார்.
இதனால் பாரதிகண்ணம்மாவை டிஸ்சார்ஜ் செய்த நெட்டிசன்கள் ஆ ராசாவை அதற்கு பதில் அட்மிட் செய்து உபிஸ் நாய்கள் என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர்.