கஞ்சா பழக்கத்திலிருந்து எப்படி மீண்டேன் தெரியுமா? – பாக்யராஜ் ஓப்பன் டாக்

219

நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தனக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் பாக்கியராஜ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. சமீபத்தில் ‘கோலா’ என்கிற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ‘கஞ்சா அடிப்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்டணும்’ எனப்பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய பாக்யராஜ் இளம் வயதில் தனக்கும் கஞ்சா பழக்கம் இருந்ததாக கூறினார்.

இளம் வயதில் நடிகர் விஸ்வத்துடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவருக்கு அந்த பழக்கம் இருந்தது. அவர் மூலமாக எனக்கும் அந்த பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை நண்பர்களுடன் கஞ்சா அடிக்கும் போது ஒருவன் எதற்கு சிரிக்கிறோம் எனத் தெரியாமல் சிரித்தான். அவனை பார்த்து அனைவரும் சிரித்தோம். அப்போது நான் தடம் மாறி செல்வதை உணர்ந்தேன். உடனடியாக சென்னை கிளம்பி வந்துவிட்டேன். சிகரெட் பழக்கத்தையும் 15 வருடங்களுக்கு முன்பு விட்டு விட்டேன்’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !