தமிழ் தெலுங்கு படங்களில் பிஜிஎம்மில் கலக்கும் தமன்

21

பாய்ஸ் படத்தில் குண்டான உடல்வாகுடன் கதாநாயகனின் நண்பர்களில் ஒருவனாக நடித்தவர் தமன். அந்தப்படம் பார்க்கும்போது நாம் இவர் ஒரு பெரிய இசையமைப்பாளராக வருவார் நினைத்திருக்க மாட்டோம்.

தனக்கு உள்ள இசைத்திறமையின் காரணமாக தமன் தமிழ், தெலுங்கு சினிமா படங்களின் இசையமைப்பாளராக ஆனார்.

அதுவும் சமீப நாட்களாக தெலுங்கு திரைப்படங்களில் அதிரடி பிஜிஎம் கொடுப்பதில் வல்லவராக உள்ளார்.

80களில் ரஜினிகாந்த் படத்தின் ஓப்பனிங்கில் ரஜினியை காண்பிக்கும் முதல் காட்சி சும்மா அதிரடியாக இருக்கும் மாப்பிள்ளை, ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அந்த படங்களில் இளையராஜாவின் பின்னணி இசை செம மாஸாக இருக்கும்.

அதுபோல மாஸ் பின்னணி இசையை தமன் தற்போது தமிழ் சினிமாக்களில் கொடுத்து வருகிறார் சமீபத்தில் வந்த ஈஸ்வரன் படத்தில் வந்த பின்னணி இசையே உதாரணம்.

இது போல் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வந்துள்ள க்ராக் படத்தின் அதிரடி போலீஸ் அதிகாரியாக ரவி தேஜா வரும் காட்சிகளில் பின்னணி இசை தூள் பறக்கிறது.

பிஜிஎம்மில் தெறிக்க விடும் தமன் சில நாட்களுக்கு முன் தெலுங்கில் வந்த டிஸ்கோ ராஜா படத்தில் இடம்பெற்ற டீங்கிடி பப்பா என்ற பாடலை தமன் இசையில் வந்த ஹிட் பாடல்களுக்கு உதாரணமாக கூறலாம். தெலுங்கில் நம்பர் 1 இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து வருகிறார் தமன். பாடலும் பின்னணி இசையும் இவரது ஸ்டைலில் வேற லெவல் என சொல்லலாம்.

https://www.youtube.com/watch?v=Xl7uJpjaKUM

பாருங்க:  ஆசிரியரை மிரட்டி நிர்வாண வீடியோ ; படுக்கைக்கு அழைத்த மாணவர் : சென்னையில் அதிர்ச்சி