ஹிந்தி நடிகர் சோனு சூட்டை தெரியாதவர்கள் கூட கடந்த 6 மாத காலங்களில் அவரைப்பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். கொரோனா காலங்களில், ஒரு சிலர் சின்ன உதவியை செய்து விட்டு செல்ஃபி எடுத்து பில்டப் கொடுத்து வரும் நிலையில் சோனு சூட் செய்த உதவி அளவிட முடியாதது.
ஓரிரு உதவிகளோடு நிறுத்தி விடாமல் தன்னால் முடிந்த அளவு எல்லோருக்கும் உதவி செய்தார். உணவுப்பொருட்கள் மட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பலர் நடந்து சென்ற நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில் பலருக்கும் வாகன வசதியும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்தார். ஆந்திராவில் கஷ்டப்பட்ட விவசாயி ஒருவருக்கு டிராக்டரே வாங்கி கொடுத்துள்ளார்.
இதற்காக தனது வருமானத்தின் பெரும்பகுதியை இழந்திருப்பார் இவர். இப்படி தன்னலம் கருதாது உதவி செய்த இவருக்கு ஐநா சபையில் இவருக்கு சிறந்த மனிதாபிமானி விருது திங்கட்கிழமையன்று வழங்கப்பட்டுள்ளது.