தமிழ்த்திரையுலகில் மெளனம் பேசியதே படம் மூலம் கடந்த 2002ல் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. அதற்கு முன்பே பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.
ஒரு கட்டத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்து முன்னணி கதாநாயகர்களான அஜீத், விஜய் உள்ளிட்ட நாயகர்களுடன் ஜோடி போட்டவர் த்ரிஷா.
இவர் 1999ம் ஆண்டு வென்ற மிஸ் சென்னை என்ற பட்டம்தான் திரையுலகுக்கு அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்ததாம் இன்றுதான் அந்த முக்கிய நாளாம்.அதனால் 30.09.99 என் வாழ்க்கையை மாற்றிய நாள் என த்ரிஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்