Latest News
தமிழ் நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு
தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் உள்ளன.
இவற்றில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 லட்சம் ரூபாய் பரிசு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட இருக்கிறது. அதே போல் சிறந்த நகராட்சிகளாக நீலகிரியின் உதகை, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு தேனி மாவட்டம் சின்னமனூர் உள்ளிட்டவைகள் தேர்வாகியுள்ளது.