Connect with us

Entertainment

ஆடு வெட்டி பலி கொடுத்த ரசிகர்கள்- எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா

ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு அவரின் அண்ணாத்தே பட பர்ஸ்ட் லுக் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் வெளியானது. இதை கொண்டாடும் வகையில் அவரது போஸ்டருக்கு ரத்த பலி கொடுப்பதற்காக ஒரு ஆட்டை வெட்டி சில ரசிகர்கள் பலி கொடுத்துள்ளனர்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் அல்லாத பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு அஹிம்சவாதியாக கருதப்படும் ரஜினி இதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருப்பது வருத்தத்திற்குரிய விசயம் என சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டை எதிர்த்து போராடிய விலங்குகள் நல வாரியமான பீட்டா இந்தியா அமைப்பு இந்த ஆடு வெட்டி பலி கொடுத்த ரஜினி ரசிகர்களுக்கு தன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

பாருங்க:  வேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்; மக்கள் நீதி மய்யம்

Entertainment

30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்

உலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.

சோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு  சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

சில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி! இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!
Continue Reading

Entertainment

நடிகர் ஜெய்யின் மகிழ்ச்சி

பகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.

நடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்

தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.

தன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.

 

பாருங்க:  மத்திய அரசு அனுமதி இல்லாமல் விடுதலை ஆனாரா சஞ்சத் தத்? - பரபரப்பு செய்தி
Continue Reading

Entertainment

நடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்

கவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.

மேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.

நடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

பாருங்க:  வலிமை பட அப்டேட்ட கேட்ட ரசிகர்களுக்கு அஜீத் கொடுத்த அப்டேட்
Continue Reading

Trending