காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர்

16

அந்தக்கால நடிகரான சந்திரபாபுவைத்தான் இது போல சம்பவத்துக்கு உதாரணமாக கூறுவார்கள். தன் மனைவியை திருமணமான அன்றே பிரிந்த சந்திரபாபு அவரது காதலனுடன் சேர்ந்து வாழ அவரை விட்டு விலகி விட்டதாக கூறுவர். அது போல ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உத்தம் குமார்- சப்னா குமாரி தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சப்னாவுக்கு கணவர் உத்தம் குமாரின் உறவினர் ராஜு குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. சப்னா அடிக்கடி காதலனிடம் போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த உத்தம் குமாரும் அவரது குடும்பத்தினரும் சப்னாவை கண்டித்துள்ளார்.

ஆனாலும், ராஜுகுமாரை திருமணம் செய்து கொள்வதில் சப்னா உறுதியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர், தன்னுடைய மனதை கல்லாக்கிக் கொண்டு, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், தனது காலில் விழுந்த இருவரையும் உத்தம் குமார் ஆசீர்வாதம் செய்துள்ளார். ஆனால் இறுதியில் உத்தம் குமார் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துள்ளது. இது காண்போரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பாருங்க:  டெடி பொம்மைக்கு குரல் கொடுத்தது யார்
Previous articleவேக்சின் எங்கடா சித்தார்த்தின் அதிரடி டுவிட்
Next articleவாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்- ஆவலில் மக்கள்