பியூட்டி பார்லரா இனி இல்லை- ஆப்கானிஸ்தான் கொடூரம்

பியூட்டி பார்லரா இனி இல்லை- ஆப்கானிஸ்தான் கொடூரம்

ஆப்கானிஸ்தானில் பழமைவாத இஸ்லாமிய ஆட்சியான தாலிபான்களின் ஆட்சி தொடங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு இருந்த இவர்களின் ஆட்சியில் மக்கள் மிகுந்த கொடுமையில் இருந்தனர். ஓசாமாவை வேட்டையாடுகிறேன் என உள்ளே நுழைந்த அமெரிக்க படைகள் உள்ளே இருந்ததால் தாலிபான்கள் கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருந்தனர். அப்படியும் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியுள்ளது. பழமைவாதத்தை கையில் எடுக்கும் இவர்கள் நவீனமான விஷயத்துக்கு எல்லாம் தடை போடுவர்.

அதில் முதல் கட்டமாக பியூட்டி பார்லரில் இருக்கும் பெண்கள் புகை படத்தை அழித்து வருகின்றனர்.