cinema news
பீஸ்ட் படம் எப்படி உள்ளது முழு விமர்சனம்
இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் எப்படி உள்ளது என ரசிகர்கள் பலர் கூறியிருக்கிறார்கள்.பல விமர்சனங்களும் வந்துள்ளன.ஒரு மாலில் இருக்கும் அனைவரையும் பணயக்கைதிகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிடிக்கின்றனர்.
ரா அதிகாரியாக வரும் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் அவர்களை பிடிப்பதாக கதை.அந்தக்கால ரோஜா தொட்டு தீவிரவாதிகளை ஹீரோக்கள் பிடிப்பதற்கு என்ன என்ன முயற்சி எடுப்பார்களோ அதை எல்லாம் மிக்ஸ் செய்து எடுத்திருப்பதாக முதற்கட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் படங்கள் என்றாலே பாடல்கள்தான் என்று இருந்த நிலை மாறி படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் வைத்து விட்டு படம் முடிந்த பிறகு ஜாலி லோ ஜிம்கானா பாடலை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
படம் சாதாரண கதைதான் என்றாலும் பல இடங்களில் விஜய்தான் கதையை தூக்கி நிறுத்துகிறார். கதாநாயகி பூஜா ஹெக்டே பரவாயில்லை.
மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான் பீஸ்ட் என சொல்லப்படுகிறது.