cinema news
பீஸ்ட் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி
பீஸ்ட்’ புகைப்படங்கள் லீக் ஆகியிருப்பது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
அங்கிருந்து படத்தின் 2 புகைப்படங்கள் லீக்காகி இருப்பதாகத் தெரிகிறது. இதில் வெளிநாட்டில் மிருகங்களுக்கு இடையே விஜய் நிற்பது போன்று ஒரு புகைப்படம், தீவிரவாதி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் விஜய்யுடன் இருப்பது போன்று ஒரு புகைப்படம் ஆகியவை வெளியாகியுள்ளன.
இந்தப் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது, படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தாண்டி இதுவரை எந்தவொரு புகைப்படமும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இதனால் எப்படி புகைப்படங்கள் வெளியானது என்ற விசாரணையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.