Connect with us

பீஸ்டுக்கு பார்ட்டி கொடுத்த விஜய்

cinema news

பீஸ்டுக்கு பார்ட்டி கொடுத்த விஜய்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தமிழ் வருடப்பிறப்பன்று வெளிவந்த படம் பீஸ்ட். இப்படத்தின் கதையானது ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் ஹை ஜாக் செய்வதும் முன்னாள் ரா அதிகாரியான வீர ராகவன் அந்த சதிச்செயலை முறியடிப்பதும்தான் கதை.

படம் வருவதற்கு முன் அதிக பரபரப்பை இப்படம் ஏற்படுத்திய நிலையில் படம் வந்த பிறகு காற்றுப்போன பலூன் போல் ஆனது.

இருப்பினும் விஜய் ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்கத்தினரும் , படம் தயாரித்த சன் பிக்சர்ஸும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே இப்பட கதாநாயகன் விஜய் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து அசத்தி இருக்கிறார்.

இவ்விருந்தில் இயக்குனர் நெல்சன், அனிருத் உட்பட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், அனிருத், நெல்சன் உட்பட படத்தில் பங்கேற்ற அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

More in cinema news

To Top