Entertainment
பீஸ்ட் திரைப்படம்- திரையை கிழித்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் அஜீத் மற்றும் விஜய்க்கு என பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த இரு நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டால் ரசிகர்களை தியேட்டரில் கட்டுப்படுத்தவே முடியாது.
ஆர்வக்கோளாறில் கத்துவது ஆடுவது பாடுவது என எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள்.
சிலர் ஆர்வமிகுதியில் தியேட்டர் கண்ணாடியை உடைப்பது, திரையை கிழிப்பது என செய்வர்.இதற்கு முன் அஜீத் ரசிகர்கள் ஜி படம் வந்தபோது திண்டுக்கல்லில் தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர். அசல் படம் வந்தபோது இராமநாதபுரத்தில் ஒரு தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்தனர். வலிமை படம் வந்தபோது சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர்.
இதுபோல் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் டிரெய்லருக்கே நெல்லை ராம் தியேட்டரில் சேர்களை உடைத்தனர். இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான இன்று நாகர்கோவிலில் உள்ள வசந்தம் தியேட்டரில் தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்துள்ளனர்.
