cinema news
குழந்தைகள் நடித்துள்ள பீஸ்ட் டிரைலர் பார்க்க வேண்டுமா
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகியது. பலத்த வெற்றி பெறும் என்று இப்படத்தை எதிர்பார்த்த நிலையில் படம் பயங்கர சறுக்கலை சந்தித்தது.
பல இடங்களில் பீஸ்டை விட கேஜிஎஃப் 2 வெற்றிவாகை சூடிக்கொண்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
அதுதான் வெளியாகிருச்சே வெளியாகி படமும் வெளியாகிருச்சே அதுக்கு என்ன இப்போ என்று சொல்றிங்களா.
படம் வெளியாகி ஒரு வாரத்துக்கு பின் சில சிறுவர்கள், சிறுமிகள் சேர்ந்து அச்சு அசலாய் ஒரு பீஸ்ட் டிரைலரை உருவாக்கி உள்ளனர். அதில் என்ன பார்த்தோமோ அது போலவே ஒரு டிரைலரை உருவாக்கி உள்ளனர்.
அந்த டிரைலர் பார்க்கவும் அழகாக க்யூட்டாக உள்ளது. முழுக்க முழுக்க சிறுவர் சிறுமிகளே சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த டிரைலர் பார்க்கவே அழகாக உள்ளது. இதோ அந்த டிரெய்லர்.
விஜய்யின் பீஸ்ட் திரைப்பட ட்ரைலரை தத்ரூபமாக மறு உருவாக்கம் செய்த சிறுவர்கள்; வைரலாகும் வீடியோ!#SunNews | #Beast | #Vijay | #BeastTrailer | #BeastMode | #ViralVideo | @actorvijay | @Nelsondilpkumar | @anirudhofficial | @selvaraghavan | @hegdepooja pic.twitter.com/7stXzmeluX
— Sun News (@sunnewstamil) April 23, 2022