தமிழ் படங்களில் காட்சி சூழலுக்கேற்ப ஒரு சில படங்களில் மாற்றுமொழி பாடல்கள் வருவதுண்டு. அப்படி வருவது அரிதாக இருந்தாலும் சில பாடல்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து விடுவதுண்டு.
அப்படி ஒரு பாடல்தான் இது. ஹேய் சகுகுன் குச்சு கெகன சகுன் என்ற இந்த பாடலை கேட்டு மயங்காதவர்களே இருக்க முடியாது. புதிதாக கேட்பவர்களும் இப்பாடலை கேட்டால் கண்டிப்பாக மயங்கி விடுவார்கள்.
மறைந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கி அசோக்குமார் ஒளிப்பதிவு செய்த நண்டு படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. இந்த பாடலை பிரபல பழம்பெரும் பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் எழுதினார்.
படத்தின் காட்சி சூழல் வட மாநிலத்தில் இருக்கும் மாப்பிள்ளை தமிழ்ப்பெண்ணை பெண் பார்க்க வருவதாக அமையும். இந்த பாடலுக்கு அழகிய இசையை வெளிப்படுத்தி இருந்தார் இளையராஜா.
பிரபல பாடகி எஸ்.ஜானகி அவர்களும், ஹிந்தி பாடகர் புபேந்திராவும் இப்பாடலை இணைந்து பாடினர். அப்படி ஒரு அருமையான பாடல் கேட்காதவர்கள் கேட்டு இன்பம் பெறவும்.
https://www.youtube.com/watch?v=TBGHBYFz_3A
https://www.youtube.com/watch?v=TBGHBYFz_3A

