Latest News
பாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்
கொள்ளையர்கள் இப்போதெல்லாம் நூதனமாக திருட ஆரம்பித்து விட்டனர். பல ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருப்பதில்லை. செக்யூரிட்டிகள் இருந்தாலும் அதிரடியாக அவரை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் திருடர்களும் இருக்கிறார்கள். ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஏடிஎம் வைத்திருப்பவர்கள் தகுந்த பாதுகாப்பை செய்யவில்லை எனில் கீழ்க்கண்ட சம்பவம் மாதிரிதான் நடக்கும் என்று உணர்த்துகிறது.
திருப்பூர் அருகே கூலிப்பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் உள்ளது . இந்த ஏடிஎம்முக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஏடிஎம் மிஷினை உடைத்து வாகனத்தில் வைத்து கட்டி இழுத்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.