Latest News
பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளில் போராட்டம் நடத்த தடை
பெங்களூருவில் ஹிஜாப் அணிந்து வருவது , காவி அணிந்து வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த சர்ச்சை தீர்ந்தபாடில்லை தினம் தோறும் ஏதாவது போராட்டங்களும் பிரச்சினைகளுமாய் காவல்துறைக்கு பெரிய தலைவலியாய் உள்ளது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கல்லூரி அருகே 200 மீட்டர் சுற்றளவில் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூருவிலும் எந்த போராட்டங்களும் பள்ளி கல்லூரி அருகே நடத்தக்கூடாது என மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.