வங்க தேசத்தில் கடும் வன்முறை- பிரதமர் மோடியின் பயணத்தால் அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம்

24

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வங்கதேச பயணம் சென்று திரும்பி விட்டார். இருப்பினும் நரேந்திர மோடி அவர்களை இஸ்லாமிய விரோதிகள் போலவே இங்கிருக்கும் அடிப்படைவாத அமைப்புகள் சித்தரிப்பது போலவே வங்க தேசத்தில் இருக்கும் அடிப்படைவாத அமைப்புகளும் சித்தரித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

மோடி இந்தியா திரும்பிய பிறகும் கிழக்கு வங்கதேசத்தில் கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன. ரயில் மறியல், தேசிய நெடுஞ்சாலை மறியல் என பலவிதமான போராட்டங்கள் அங்கு நடந்து வருகின்றன.

கிழக்கு வங்கதேசத்தில் உள்ள பிராமன்பாரியா மாவட்டத்தில் ரயில் மீது ஹெபிசத் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ரயிலின் இஞ்சின் மற்றும் ஏறக்குறைய அனைத்து பெட்டிகளையும் நாசம் செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று ஹெபிசத் இ இஸ்லாம் என்ற அமைப்பு அழைப்பு விடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. தலைநகர் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்கார்கள் வாகனங்களையும் டயர்களையும் கொளுத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர் துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இப்படியான தொடர் போராட்டங்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாருங்க:  பாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்
Previous articleபரபரப்பான பிரச்சாரத்துக்கு நடுவில் குஷ்புவின் ஒரே ஆறுதல்
Next articleகொரோனாவால் வேலை இழந்த பெண் ஒளிப்பதிவாளர்- மோமோ ஸ்டால் தொடங்கினார்