Tamil Flash News
இன்னும் எத்தனை பேரோ.?.அமமுகவில் இருந்து வெளியேறும் புகழேந்தி…
டிடிவி தினகரனின் அமமுக-லிருந்து பெங்களூர் புகழேந்தி வெளியே இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
தினகரன் மீது அதிருப்தி கொண்ட கருர் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, வி.பி. கலைராஜன் உள்ளிட்ட பலரும் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். இந்நிலையில், புகழேந்தியும் விரைவில் வெளியேறுவார் எனத் தெரிகிறது.
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளுடன் புகழேந்தி ஒரு ஹோட்டலின் அறையில் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கும் அந்த நிர்வாகிகளிடம் பேசும் புகழேந்தி ‘பொறுமையாக இருங்கள் நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. 14 வருடங்கள் யாரென்றே தெரியாத தினகரனை ஊருக்கே வெளிக்காட்டியது நான்தான் . நமக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறுவோம். நான் செல்லும்போது உங்களையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்’ என பேசும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
எனவே அமமுகவில் இருந்து புகழேந்தி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் மீது அதிருப்தியில் இருந்தபோது அவர் தினகரனை திட்டுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை அமமுகவின் ஐடி விங் தான் வெளியிடுகிறது என செய்திகள் கசிந்து வருகிறது.