Tamil Flash News
கோக், பெப்ஸிகளுக்கு தமிழகத்தில் தடை – அதிரடி அறிவிப்பு
கோக், பெப்ஸி போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக இளைஞர்கள் குரல் எழுப்பியதால், தமிழகத்தில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்தது. ஆனால், அதன் பின் மீண்டும் அந்த குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கூறுகையில் “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தினோம். அந்நிறுவனங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் மீண்டும் தமிழகத்தில் விற்பனை செய்தோம்.
தற்போது மீண்டும் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினம் முதல் தமிழகத்தில் மீண்டும் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களுக்கு தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக இளநீர், பதநீர் உள்ளிட்ட உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை ஊக்குவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.