ஆசிய சேம்பிஷன்ஷிப் போட்டியில் தமிழகத்துக்கு தங்கம் பெற்றுத்தந்த கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து சோதனையில் சிக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்நிலையில், அவர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. கோமதி மாரிமுத்துவின் சிறுநீரக சேம்பிளில் செய்யப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் உட்கொண்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
மேலும், அடுத்த சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டால், அவரிடமிருந்து தங்கப்பதக்கத்தை பறிப்பதோடு, 4 ஆண்டுகள் அவருக்கு தடை விதிக்கப்படும் எனவும் தடகள உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை செய்திகளை பார்த்துதான் தான் தெரிந்து கொண்டதாகவும், தான் ஒருபோதும் ஊக்கமருந்துவை உட்கொண்டதில்லை எனவும் கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.