ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறும் ஊர்காத்த அம்மன் ரகசியம்

132

இரண்டு வருடம் முன்பு இந்திய அளவில் பிரபலமான ஜோதிடர் பாலாஜி ஹாசன். அவர் ஒரு விசயத்தை சொல்லியுள்ளார். அதாவது ஊர்காக்கும் எல்லை தெய்வங்களை பற்றிய தகவல்கள்தான் அது.

அவர் தனது முகநூலில் கூறி இருக்கும் தகவல் இது

இந்தப் படத்தைப் போட்டு ஒரு சில மக்கள் பரவசம் அடைகிறார்கள்
இது நேற்று இன்று வந்த வழக்கமல்ல தொன்றுதொட்டு வந்த வழக்கம்.
அந்த காலத்தில் ஒரு நோய்த்தொற்று ஒரு ஊரில் பரவினால் அந்த கிருமியை உருவம் செய்து அம்மனை வழிபட்டால் அந்த நோய் அந்த ஊரை விட்டு விலகும் என்பது ஐதீகம்
இப்படி வந்தவர்கள்தான்
சின்னம்மை மாரியம்மன் ( சின்னம்மை )
பெரியம்மை மாரியம்மன் ( பெரியம்மை )
குஞ்சு மாரியம்மன் ( ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட பருக்கள் போன்ற கொப்பளங்கள் )
முண்டக்கண்ணி அம்மன் ( மெட்ராஸ் ஐ போன்ற கண் வீங்கியது ஒருகாலத்தில் ஒரு வைரஸ் நோய் )
கண்ணாத்தா ( ஒருவித வைரஸ் ஆல் கன் பாதிப்படைந்தது )
பிளேக் மாரியம்மன் ( பிளேக் நோயால் மக்கள் அவதிப்பட்ட போது உருவான மாரியம்மன் )
கருமைநிற மாரியம்மன் ( தொழுநோயால் கருமை நிறமானது ஒரு காலத்தில் )
இப்படி அந்த காலத்தில் நோய்களை அந்த ஊர் எல்லையில் தடுப்பதற்காக அந்த நோய் பெயரிலேயே வைத்து அம்மன்கள் இன்னும் ஏராளம்
ஒரே நேரத்தில் ஒரே நோய் பலருக்கும் தாக்கப்பட்டு கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்த்திக்கொண்டே செல்லும் நோய்களுக்கு கொள்ளை நோய்கள் என்று பெயர். பிளேக் , காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்றவை கொள்ளை நோய்களாகும். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத போதுதான் இந்த நோய்கள் பொதுமக்களை தாக்கியுள்ளது.
கொள்ளை நோய்கள் ஏற்பட்ட காலங்களில் அந்த நோயிலிருந்து காத்துக்கொள்வதற்காக மக்கள் ஊர் விட்டு ஊர் செல்லும் வழக்கமும் இருந்தது.
நம்முடைய முன்னோர்கள் இந்த கொள்ளை நோய்களை சந்தித்த காலங்களில் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு ஊரில் எல்லைப்பகுதிகளிலும் அந்த நோயின் பெயருடன் ஒரு தெய்வத்தின் பெயரையும் இணைத்து அந்த தெய்வத்தை முக்கோணமாக உள்ள கற்களில்
பெண்தெய்வ சக்தியை வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.பெண்தெய்வங்களால் நோயின் வீரியத்தை சாந்த படுத்தமுடியும் என்று நம்முன்னோர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இத்தகைய வழிபாடுகளால் இந்த நோயின் தாக்கங்கள் குறைந்து நோய்நீங்கியதாக வயதானவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கின்றேன்.
தற்போது இவ்வளவு மருத்துவ வசதிகள் இருக்கும்போதும்
கொரானா என்ற மாபெரும் கொள்ளை நோய்தாக்கத்திற்கு உலகமே அஞ்சி நடுங்கி வருகின்றது.
இந்தகாரணங்களால் தற்பொழுது நம்மூதாதையர்களை போன்றே இந்த நோயின் தாக்கத்தினை தடுப்பதற்காக உங்களது ஊரில் உள்ள கோவில்களில் இந்த நோயினை கட்டுப்படுத்த நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்திய அதே முறையில் இந்த நோயின் பெயரில் தெய்வத்தை உருவாக்கி முக்கோண வடிவ கற்களில் இந்த தெய்வத்தை ஆவாகணம் செய்து வழிபடலாம்.
இதனால் இந்த கொள்ளை நோய் விரைவில் நீங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.
பழக்கவழக்கம் தெரியாமல் கிண்டல் பண்ண வரவேண்டாம் என கூறியுள்ளார்.
பாருங்க:  கோவையில் இலங்கை தீவிரவாதிகள் பதுங்கல்? - போலீசார் தீவிர சோதனை
Previous articleஇந்த பெயரில் இப்படி ஒரு படமா
Next articleமாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை