Latest News
பாலா மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கினார்- பாலாவை கிழித்து தொங்க விடும் தயாரிப்பாளர்
பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் அப்பாவாக நடித்தவர் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி. தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த நேரத்தில் பாலாவுடன் நட்பு ஏற்பட்டதாம். அந்த நட்பின் அடிப்படையில் அழகன் தமிழ்மணியை நான் கடவுள் படத்தில் நடிக்க அழைத்தாராம் பாலா.
தம்பி எனக்கு சுட்டுப்பட்டாலும் நடிப்பு வராது என தமிழ்மணி சொல்ல எனக்கு அப்படி நடிப்பு வராத ஆள்தான் வேணும் என பாலா , தமிழ்மணியை நடிக்க வைத்தாராம்.
காசியில் போய் கடும் வெயிலில் ஒரு மாதத்திற்கும் மேல் ஷூட்டிங் நடந்ததாம்.
இதற்கு நடுவில் ஒருவரிடம் பைனான்ஸ் வாங்கி கொடுத்தது தொடர்பாக பாலாவுக்கும், தமிழ்மணிக்கும் நடுவில் சின்ன மனக்கசப்பு ஏற்பட்டதாம். அதை வைத்து தான் நடித்த 80க்கும் மேற்பட்ட காட்சிகளில் ஒன்றிரண்டை மட்டும்தான் படத்தில் வைத்தாராம்.
இந்த படத்தில் எப்படி நடிச்சு இருக்கிங்க என சில பத்திரிக்கைகள் கேட்டதற்கு இப்படத்தில் நான் வாழ்ந்திருக்கேன் என சொன்னாராம். இதை எல்லாம் கேட்ட பாலா அழகன் தமிழ்மணியை ஆபிசுக்கு வர வைத்து மிகுந்த மரியாதை இல்லாமல் பேசினாராம் என்ன வாழ்ந்து இருக்கிங்க என மோசமாக பேசினாராம். ஏற்கனவே இது பற்றி தமிழ்மணி கூறி இருந்தாலும், மீண்டும் டூரிங் டாக்கீஸ் என்ற சேனலில் இது பற்றி பேசி இருக்கிறார்.
