---Advertisement---

இயக்குனர் பாலா சூர்யா திரைப்பட அப்டேட்

Published on: May 4, 2022
---Advertisement---

நேருக்கு நேரில் நடிக்க வந்தாலும் , திரையுலக வாரிசாக இருந்தாலும் தனக்கென ஓர் அங்கீகாரம் இல்லாமல் போராடி வந்தவர்தான் நடிகர் சூர்யா. பல படங்களில் நடித்தாலும் இவருக்கு அங்கீகாரமே இல்லாமல் தான் இருந்தது.

ஒரு கட்டத்தில் பாலா இயக்கிய நந்தா திரைப்படமே சூர்யாவின் திரையுலக வாழ்வுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சூர்யா சிக்சர் அடித்து தனக்கென ஒரு பாதையை வகுத்து முன்னணி நடிகராகி விட்டார்.

இயக்குனர் பாலாவோடு பிதாமகன் படத்துக்கு பின் இணையாத சூர்யா 18 வருட காலத்துக்கு பிறகு பாலாவுடன் இணைந்து அவரது படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடந்து வந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் கோவாவில் தொடங்க இருக்கின்றன என தகவல்கள் வெளியாகி உள்ளது.