cinema news
பாலா படத்தில் ஹேமாமாலினி நடிக்கிறாரா
இயக்குனர் பாலா வர்மா படத்துக்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. நடுவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு எல்லாம் வந்து சென்றார். அடுத்த படத்துக்கான காட்சிகளுக்காக வந்து சென்றார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்நிலையில் பாலா அடுத்த வருடம் சூர்யாவை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். அந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வயதான , இளமையான இரு வேடங்களில் சூர்யா நடிக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறாராம்.
முதுமையான சூர்யாவுக்கு அந்தக்கால ஹிந்தி டாப் நடிகை ஹேமமாலினி நடிக்க இருக்கிறாராம். அவரிடம் நடிக்க பேச்சுவார்த்தை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது 73 வயதாகும் ஹேமமாலினி ஹே ராம் படத்துக்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.