Latest News
விண்ணப்பம் மனு மூலம் நம் கோரிக்கையை நிறைவேற்றும் அதிசய பைரவர்
விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் அக்னி பைரவர்!!!
தட்சணபஞ்ச பூத ஸ்தலங்கள் என்று ஐந்து விதமான சிவாலயங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன.
அதில் ஒன்று தாருகாபுரம் அருள்மிகு
மத்தியஸ்தநாதர் திருக்கோயில் ஆகும்.
இது தட்சிண பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகும் .
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய வணிக மாநகரமாக இது இருந்தது.
தற்போது இந்த ஆலயம் மட்டுமே எஞ்சி இருக்கிறது .
இந்த ஆலயத்தில் அக்னி பைரவர் அருள்பாலித்து வருகிறார்.
இன்றைய கால கட்டத்தில் பலருக்கு கர்ம வினையால் அல்லது பாதகாதிபதி திசை அல்லது மாந்திரீக பாதிப்பினால் பலருக்கு கடன் வளர்ந்து கொண்டிருக்கிறது அல்லது வாழ்நாள் முழுக்க உண்டாகிக் கொண்டிருக்கிறது.
கடன் தீர வேண்டும் என்று விரும்புபவர்கள் பின்வரும் விதமாக இந்த கோயிலுக்கு வந்து கோயிலுக்கு உள்ளே அமர்ந்து இந்த கடன் தீர்க்கும் விண்ணப்ப மனுவை எழுதி கோயில் நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இவ்வாறு கடன் தீர்க்கும் விண்ணப்ப மனு வாங்குவார்கள்.
உதாரணமாக
அனுப்புனர்
சி.வைத்தியநாதன்
கோயில் தெரு
அண்ணாமலை
பெறுநர்
அருள்மிகு அக்னி பைரவர் சன்னதி அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோயில்
தாருகாபுரம்
திருநெல்வேலி மாவட்டம்.
ஐயா வணக்கம்
கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு தொழில் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சுமார் எட்டு கோடி ரூபாய் கடன் வந்துவிட்டது.
இதற்கு வட்டி கட்ட முடியாமல் நான் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறேன் .
எனவே,அடியேனுக்கு அருள் புரிந்து எனக்கு தொழில் வளம் பெருகி வராக்கடன்கள் அனைத்து விரைவில் வசூல் ஆகி எனது எட்டு கோடி ரூபாய் கடன் அனைத்தும் தீர அருளும்படி தங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய கடன் தீர்ந்த பிறகு மீண்டும் தங்கள் சன்னதிக்கு வருகைதந்து முறைப்படி அபிஷேகம் செய்து அன்னதானம் செய்வேன் .
என்னுடைய கடன் தீர்த்தமைக்கு தங்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பேன் என்று பிற்காலத்தில் உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் பக்தன்
சி.வைத்தியநாதன்
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இங்கே நம்முடைய கடன் தீர வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு எழுதி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம்.
கோயில் நிர்வாகிகள் பைரவர் சன்னதியில் இந்த கடன் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஒரு முறை வாசித்து காட்டுவார்கள்.
அதன் பிறகு அந்த கடன் விண்ணப்பங்கள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைக்கப்படும் .
சில மாதங்கள் அல்லது சில வருடங்களுக்குப் பிறகு கடன் தீர்ந்து விட்டது என்று யார் என்று சொல்கிறார்களோ சொன்ன பிறகு அந்த விண்ணப்பங்கள் கடன் விண்ணப்பங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும் .
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாநகரில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்ற ஊருக்கும் புளியங்குடி என்ற ஊருக்கும் நடுவில் உள்ளடங்கிய கிராமமாக தாருகாபுரம் அருள்மிகு மத்தியஸ்த நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
சிவ ராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.
