கொரோனா காரணமாக கடிதம் மூலம் வாழ்த்து சொன்ன பாக்யராஜ்

கொரோனா காரணமாக கடிதம் மூலம் வாழ்த்து சொன்ன பாக்யராஜ்

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. நேற்றைய தினம்  திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் பலரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வந்ததால் தங்களை நேரில் பார்த்து வாழ்த்து சொல்லவில்லை எனவும்  தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவைப்பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன் அன்பு மகனான தாங்கள் அனைத்து தமிழக தாய்மார்களின் சுமை குறைத்து கரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் நிறைவான பால் வார்த்து விட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார் பாக்யராஜ்.