பகத் பாசிலின் சைக்கோ த்ரில்லர் இருள் நெட்ப்ளிக்ஸில்

32

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் நடித்திருக்கும் மர்மப்படம் இருள். இந்த படத்தின்  ட்ரெய்லரை வியாழக்கிழமை அன்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது. ஃபகத் பாஸில், ஷோபின், தர்ஷனா என மூன்றே மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கும் இந்தப் படத்தை நஸீஸ் யூஸுல் இஸூதின் இயக்கியுள்ளார்.

ஏப்ரல் 2-ல் படம் வெளியாகிறது

சமீபத்தில் நடிகர் ஃபகத் பாசில் விடுகதை பாணியில் கேள்வி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதுவே இந்தப் படத்தின் கதைச் சுருக்கம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். “பனி படர்ந்த ஒரு இடத்தில் கொல்லப்பட்ட ஒரு நபரின் உடல் கிடைத்தது. இரண்டு கோடுகளுக்கு நடுவில் இருந்த இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே கிடைத்த ஒரே ஆதாரம். காவல்துறை யாரைத் தேடுகிறது?” என்று ஃபகத் பாஸில் பகிர்ந்திருந்தார்.

இந்த மர்மப்படத்தை பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பாருங்க:  ஒவ்வொரு மணிநேரமும் செல்பி எடுத்து போடனும்! அரசு உத்தரவிட்டது ஏன்?
Previous articleவிஜய் சேதுபதியின் புதிய படப்பாடல் வெளியீடு
Next articleடி இமானின் நமக்கு சோறு முக்கியம் ஆல்பம்