Connect with us

கூடாத நாள் என்றால் என்ன- முழு விளக்கம்

Latest News

கூடாத நாள் என்றால் என்ன- முழு விளக்கம்

கூடாத நாள் என்றால் என்ன?

ஏழு நாட்களும் நல்ல நாட்கள் தான்.

இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் தான்.

ஆனால் சில கிழமையும் குறிப்பிட்ட கிழமையும் நட்சத்திரமும் சேரும் நாள் கூடாத நாளாக மாறி விடுகிறது.

இது பற்றிய உண்மைகளை சிலாதர் மகரிஷி முதன்முதலில் அறிந்துகொண்டார்.

பூலோக மக்கள் நன்மைக்காக நம்முடைய ஆதி மூல முதல் குரு அகத்தியர் இது பற்றிய புராண உண்மைகளை நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே உபதேசம் செய்து விட்டார்!!!

ஞாயிற்றுக் கிழமையும் வரணி நட்சத்திரமும்(3.4.2022 மதியம் 1.13 முதல் அன்று முழுவதும்)

திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும்

செவ்வாய்க் கிழமையும் உத்திராடம் நட்சத்திரமும்

புதன்கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும்

வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும்(24.3.2022 மாலை 6.33 வரை)

வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும்

சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும்(2.4.2022 அன்று காலை 11.56 வரை)

சேர்த்து வந்தால் அது கூடாத நாட்கள் ஆகும்.

இது பற்றி ஏழு புராண கதைகள் உள்ளன.

இந்த நாள் அன்று புதிய நிறுவனம் ஆரம்பிக்க கூடாது

புதிய முயற்சி ஆரம்பிக்கக் கூடாது

குழந்தைக்காக கணவன் மனைவி உறவு வைத்துக் கொள்ளக்கூடாது

சுப காரியங்கள் எதுவும் ஆரம்பிக்க கூடாது

இது போன்ற நாட்கள் ஒன்றில் நீங்கள் பிறந்து இருக்கிறீர்களா? ஆம் எனில்

 

நீங்கள் உங்களுடைய வாரம் ஒரு நாள் என்று வாழ்நாள் முழுவதும் சுயம்புலிங்கம் இருக்கும் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டும் .உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்தில் சுயம்பு லிங்கம் கோவில்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கோவில்கள் இருக்கும் .

பாருங்க:  கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனை சந்தித்த உதயநிதி

சுயம்புலிங்கம் இருக்கும் கோயிலில் அடிக்கடி உழவாரப்பணி செய்ய வேண்டும்

சுயம்புலிங்கம் கோயிலுக்கு உங்களால் ஆன பண உதவி, பொருள் உதவி, உடல் உழைப்பு போன்றவைகளை தரவேண்டும்.

சுயம்பு லிங்கம் இருக்கும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் அதை சட்டரீதியாக மற்றும் தர்ம ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக போராடி மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலமாக கூடாத நாட்களில் பிறந்ததால் ஏற்பட்ட துயரங்கள் மற்றும் அரைகுறை அதிர்ஷ்டம் போன்றவை முழுமையாக நீங்கிவிடும்

“முற்பிறவிகளில் சில தகாத செயல் செய்தவர்கள் மட்டுமே இந்த கூடாத நாட்கள் ஒன்றில் பிறவி எடுப்பார்கள்” என்று நம்முடைய முன்னோர்களாகிய சித்தர் பெருமக்கள் உபதேசம் செய்து உள்ளார்கள்.

ஓம் ஶ்ரீ ல ஶ்ரீ சத்குரு வெங்கடராம சுவாமிகள் திருவடிகள் சரணம்

சிவராஜயோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்.

More in Latest News

To Top