விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

இந்த 2020ம் ஆண்டு பல முக்கிய தலைவர்களையும், முக்கிய கலைஞர்களையும் பலி வாங்கி வருகிறது. கோவிட் 19 உள்ளிட்ட பெருந்தொற்றால் பலர் உயிரிழந்து வரும் நிலையில்.மன அழுத்தத்தாலும் மற்ற வியாதிகளாலும் உடல் நிலையை சரியாக கவனிக்காத நிலையில் பலரும் இறந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏவிஎம் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்த விஜய் நடித்த வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு சிவன் இன்று காலமானார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இயக்குனர் தரணியுடன் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இவர் மேலும்  விஜய் நடித்த பைரவா, குருவி போன்ற படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ என்ற சீரியலை இவர் இயக்கி வந்தார். இந்நிலையில் உடல் நல குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.