சூர்யாவை பார்க்கணும்- என் உயிர் தோழன் பாபு கண்ணீர் பேட்டி

28

என் உயிர் தோழன் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்தவர் பாபு. தொடர்ந்து பெரும் நடிகராக வந்து இருக்க வேண்டியவர் சில ஆண்டுகளிலேயே அவர் வேறு ஒரு படத்தில் நடித்தபோது டூப் போடாமல் தானே நடிக்கிறேன் என மேலிருந்து கீழே குதித்ததில் அவரது ஸ்பைனல் கார்டு பாதிக்கப்பட்டது.

இதனால் 25 வருடங்களுக்கும் மேலாக படுக்கையிலேயே கிடக்கிறார். சமீபத்தில் இவரை தன் படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜா நேரில் சென்று பார்த்தபோது அவரை பார்த்து கதறி அழுதார்.

பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்த்து உதவி செய்திருக்கிறார்கள். இருப்பினும் இவருக்கு மாதத்திற்கு ஆகும் மருத்துவ செலவு மட்டும் அதிகம்.

வீட்டில் ஒரு பெல் வைத்திருக்கிறார். இவரால் சத்தம் போட்டு பேச முடியாததால் அதை அடித்துதான் கூப்பிடுகிறார். சமீபத்தில் ஒரு நிறுவனம் இவரை பேட்டி எடுத்தபோது நடிகர் சூர்யா வந்து தன்னை பார்ப்பார் என எதிர்பார்க்கிறேன் என பேட்டி கொடுத்துள்ளார்.

பாருங்க:  பட்டப்பகலில் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி