கடந்த 1992ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கரசேவகர்கள் பலர் சேர்ந்து இதை இடித்தாலும் அந்த நேரத்தில் பாரதிய ஜனதா தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, அத்வானி ஆகியோர் முன்னின்று இச்செயலை செய்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவாகி இருந்தது.
இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்த நிலையில் அயோத்தி இடத்துக்கும் தீர்ப்பு சொல்லி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.
ரேபரேலி, அலிகார், அலகாபாத் நீதிமன்றம் என பல்வேறு இடங்களில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று கடைசியாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டது. இன்று சொல்லப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதி எஸ்.கே யாதவ் அளித்த தீர்ப்பு.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் மசூதியை இடிக்கவில்லை மாறாக அவர்கள்தான் இடிக்க விடாமல் தடுத்தவர்கள் எனவே மசூதியை இடித்த வழக்கில் அவர்களுக்கு தொடர்பில்லை என இவ்வழக்கில் தொடர்புடைய 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.