cinema news
பாபா படத்திற்கு 19 வயது
ரஜினிகாந்த் நடித்த பாபா படம் ரிலீஆ கி நேற்றுடன் 19 வருடங்கள் ஆகிறது.ரஜினி தன் குருவாக கருதும் மஹா அவதார் பாபாஜி என்ற இமயமலையில் இன்றும் சூட்சுமமாக வாழ்வதாக கூறப்படும் மஹானின் பெயரில் நடித்த படம்.
படம் முழுவதும் பாபாஜியின் ஆன்மிக கோட்பாடுகள் அதிகம் திரைக்கதையில் சேர்க்கப்பட்டிருந்தது. படம் முழுக்க ஆன்மிக வாடை அதிகம் வீசியதால் ரசிகர்களை இப்படம் அதிகம் கவரவில்லை.
சண்டைக்காட்சிகள் , வில்லன் என நிறைய இருந்தாலும் ரஜினி ரசிகர்களை இப்படம் கவரவில்லை. ரஜினி ஏற்கனவே நடித்த ஆன்மிக படமான ஸ்ரீராகவேந்திரா திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. அது போலதான் பாபா படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.
இருந்தாலும் ஆன்மிகத்தை பெரிதும் விரும்புபவர்களுக்கு இப்படம் பிடித்தது என்று சொல்லலாம்.
நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்துடன் இப்படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகிறது.