இன்று வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன் 2 பர்ஸ்ட் லுக்

63

கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென்,பார்த்திபன் நடிப்பில் கடந்த 2011ல் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன் . இதுபோலவே இன்னொரு படம் இதன் பார்ட் 2வாக செய்ய வேண்டும் என பலமுறை தனது டுவிட்டர் பதிவில் செல்வராகவன் கூறி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகும் இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார். முந்தைய படத்தின் இடைவேளைக்கு பின் காட்சிகளில் சோழ மன்னனாக பார்த்திபன் நடித்திருப்பார். அது போல ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணியளவில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  இசைஞானியை சந்தித்த விவேக்