ஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்

ஏவிஎம் நிறுவனம் கொண்டாடும் படம்

ஏவிஎம் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம்.காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் ஏவி மெய்யப்ப செட்டியாரால் இந்த நிறுவனம் திறக்கப்பட்டது. அங்கு வேதாள உலகம் உள்ளிட்ட படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் சென்னைக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டு இன்று ஏவிஎம் ஸ்டுடியோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்த ஏவிஎம் நிறுவனம் இப்போது அதிகம் படங்களை தயாரிப்பது இல்லை. இருப்பினும் தனது பழைய திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை டுவிட்டரில் இட்டு அதை ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம்பெற்ற பிடித்த பாடலை பதிவிடுமாறு ஏவிஎம் நிறுவனம் கேட்டுள்ளது.

அந்த நேரத்தில் அனிமேஷன் இல்லாத காலம். அப்போதுதான் அனிமேஷன் உள்ளிட்ட விசயங்கள் லேசாக ஆரம்பித்தது அந்த நேரத்திலேயே மிகுந்த பொருட்செலவில் அனிமேஷனுடன் ராஜா சின்ன ரோஜவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் பாடலை தயாரித்திருந்தது ஏவிஎம் நிறுவனம்.