Entertainment
இன்று ஆவணி பெளர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம்
உபநயனம் என்பது வாழ்க்கை முறையை போதிக்கும் ஒரு விசயமாகும். வாழ்க்கை முறையை உபதேசிப்பதுதான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது நமது ஞானக்கண்ணை திறப்பதாகும் அப்போது அணிவிக்கப்படும் பூ நூல் புனிதமானது.
புனிதமானதாக கருதப்படும் பூ நூலை ஆவணி மாதம் வரும் ஆவணி அவிட்டத்தில் தான் புதிய பூ நூல் அணிவிப்பார்கள். ஏற்கனவே தான் அணிந்திருந்த பூ நூலை கழற்றி விட்டு புது பூ நூலை அணிந்து கொள்வார்கள்.
பிராமணர்கள் மட்டுமல்லாது நிறைய வகுப்பை சேர்ந்தவர்கள் பூ நூல் அணிகிறார்கள். அவர்கள் அனைவருமே இன்று புதிய நூலை அணிந்து கொள்வார்கள்.
மேலும் இன்று பெளர்ணமி தினம் வேறு. நாம் நினைத்ததை இறைவனிடம் வேண்டி அது நிறைவடைவதற்கு உங்களுக்கு பிடித்த தெய்வத்திடம் மனமார மனமுருகி வழிபடுங்கள்.