சிறுமியின் திருமணத்தை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக் கொலை…

221
சிறுமியின் திருமணத்தை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக் கொலை

சிறுமியின் திருமணத்தை தடுத்தி நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூரில் நடைபெற்ற தனது மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆட்டோ ஓட்டுனர் ஜெபசீலன் மற்றும் அவரின் மனைவி பெர்சீலா ஆகியோர் சென்ற போது 5 பேர் சுற்றிவளைத்து அவர்களை பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். அதில், ஜெபசீலன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். பெர்சீலா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் அயனாவரத்தை சேர்ந்த வினோத் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதை, ஜெபசீலன் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த ஆத்திரத்தில்தான் வினோத் ஜெபசீலனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

எனவே, தலைமறைவாக உள்ள வினோத்தையும், அவருடன் வந்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பாருங்க:  கல்லூரிக்குள் புகுந்து மாணவனை வெட்டிய கும்பல்...