தமிழ்நாட்டில் புதிய ஆட்டோ கட்டணம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த இரண்டு வருடங்களுக்குள் தாறுமாறாக விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது.
75 ரூபாய் லிட்டருக்கு விற்ற பெட்ரோல், தற்போது 115 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை சார்பில் ஒரு கிலோ மீட்டருக்கு குறிப்பிட்ட தொகைதான் வாங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்படும் , சமீப நாட்களாக எந்த விலையும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
தற்போதைய பெட்ரோல் டீசல் விலைக்கேற்ப கட்டணம் மறு நிர்ணயம் குறித்து, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, ஒப்புதல் பெறப்பட்ட பின் புதிய கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.