Published
1 year agoon
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடும் போர் தொடுத்து வருகிறது. இதுவரை இப்போரில் குழந்தைகள் உட்பட 354 பேர் உக்ரைனில் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ரஷ்யா விடாப்பிடியாக போர் தொடுத்து வருகிறது.
நேற்று இருநாட்டுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய துருப்புகள் நகர்ந்து வருகின்றன.
மேலும் புதினின் செய்தித்தொடர்பாளராக முன்னிறுத்தப்படும் ரஷ்யாவின் மூத்த செய்தியாளர் திமித்ரி கிசெல்யாவ் நேற்று கூறும்போது, “ரஷ்ய நீர்மூழ்கிகளில் சுமார் 500 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளையும் அழிக்க முடியும். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் போரில் குதித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.