திருடர்கள் நாளுக்கு நாள் எல்லா ஊரிலும் அதிகரித்து வருகிறார்கள். சிலர் விதம் விதமாக யோசித்து திருடுகிறார்கள். நூதன திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எங்கதான் உட்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ என சொல்லும் அளவுக்கு பல திருட்டுகள் தினம் தோறும் நடந்து வருகிறது. பொதுவாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடுவதென்பது மிகவும் கஷ்டமான நிலைமை என்பதை மீறி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருடுபவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
உச்சக்கட்டமாக ஜேசி பி இயந்திரத்தை வைத்து ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்து அப்படியே ஏடிஎம்ல் பணம் இருக்கும் பாக்ஸை அப்படியே தூக்கும் காட்சி காண்போரை பதைக்க வைக்கிறது.
மஹாராஷ்டிராவின் சாங்க்லி நகரில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.