- Homepage
- cinema news
- அட்லியுடன் மீண்டும் இணைகிறாரா விஜய்?
அட்லியுடன் மீண்டும் இணைகிறாரா விஜய்?
TN News Reporter
Posted on
ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதால் இவரது படங்களும் நல்ல திரைக்கதையுடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தன.
ராஜா ராணி படத்துக்கு அடுத்ததாகவே விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது . அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அட்லி தெறி என்ற அதிரடி படத்தை விஜயை வைத்து இயக்கினார்.
படமும் வெற்றி பெற்றது தொடர்ந்து மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜயை வைத்து படம் இயக்கினார் அட்லி.
தற்போது சில வருட இடைவேளைக்கு பின் மீண்டும் விஜயை வைத்து அட்லி படம் இயக்க உள்ளதாக தெரிகிறது.
இது விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைதிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் முடிந்ததும் 67 வது படத்தை அட்லி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.