அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். இவர் காதலித்து சீரியல் நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அட்லி குறித்து எப்போதுமே சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துக்களே பரப்பப்படுகின்றன.
அவரின் அனைத்து படங்களுமே இன்னொரு தமிழ் படத்தின் காப்பி என்ற அடிப்படையில் அட்லி ஹேட்டர்ஸ் தொடர் விமர்சனம் வைக்கின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார் பிரியா அட்லி. அப்போது ஒர் ரசிகர் அட்லியை வெறுப்பாக பலரும் பார்ப்பது ஏன் என்ற கேள்விக்கு எங்கள் மீது இன்னும் அன்பு செலுத்துபவர்களுக்கு நன்றி அன்பை பரப்புவோம் என பதில் கூறியுள்ளார்.