ஒளிப்பதிவாளரை மனம் திறந்து பாராட்டிய அட்லி

37

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. காலப்போக்கில் தன் திறமையால் இயக்குனராக உயர்ந்து தெறி, மெர்சல், ராஜா ராணி, பிகில் உட்பட நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

இதில் 3 படங்களை இளைய தளபதி விஜயை வைத்து இயக்கியுள்ளார். இதன் மூலம் முன்னணி இயக்குனர்களின் வரிசைக்கு வேகமாக உயர்ந்த அட்லி, தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார் இவர் தயாரித்த அந்தகாரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் நன்றாக இருப்பதாக விமர்சகர்களால் பாராட்டுப்பெறும் நிலையில் படத்தில் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் அவர்களை அட்லி பாராட்டியுள்ளார்.

https://twitter.com/Atlee_dir/status/1332757159659048963?s=20

பாருங்க:  பிகில் திரைப்படம் அட்லிக்காக ஓடவில்லை – பிரபல தயாரிப்பாளர் கருத்து !