Entertainment
வைரலாகும் நடிகர் அஸ்வின்குமாரின் பேச்சு- மறுப்பு தெரிவிக்கும் அஸ்வின்
விஜய் டிவியில் வந்த ஷோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அஸ்வின்குமார். இவர் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது அப்போது பேசிய அஸ்வின்குமார் என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான். இயக்குநர் அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார் என சொல்லி இருந்தார்.
ஒரு வளரும் நடிகர் பெரிய வளர்ந்த நடிகரை போல் இப்படி பேசியதை நெட்டிசன்கள் இன்று முழுவதும் வைத்து ட்ரோல் செய்து விட்டனர்.
இதனிடையே இன்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அஸ்வின் உண்மையில் நான் ஆணவத்தோடு பேசவில்லை.குத்துமதிப்பா நான் சொன்னதை திமிரா சொன்னது மாதிரி எடுத்துக்கிட்டாங்க என விளக்கமளித்துள்ளார்.
