நண்பரை கொலை செய்த அசாம் இளைஞர்கள் சேலத்தில் கைது

25

போதைப்பொருட்கள் மனித குலத்திற்கு மிக கேடானது என, இந்த இளைஞர்கள் பட்டாளம் உணர்வதில்லை. போதை பொருட்களால் பலரும் சீரழிந்து வரும் சூழல் மிக அவலமானது. பெங்களூருவில் வேலை செய்து வந்த மூன்று இளைஞர்கள் இவர்களில் பவித்ரன் என்ற இளைஞர் 12ம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இறந்து போனவரின் செல்ஃபோன் சேலம் மாவட்டம் அருகேயுள்ள இளம்பிள்ளை என்ற ஊரின் சிக்னலை காட்டியது. உடனடியாக இங்கு விரைந்த போலீசார் உள்ளூர் போலீசார் உதவியுடன் கொலையாளிகளை தேட துவங்கினர்.

அப்போது சந்தைப்பேட்டை என்ற இடத்தில் உணவகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அசாமை சேர்ந்தவர்கள் என தெரிந்தது அவர்கள்தான் தனது சக நண்பனை கஞ்சா போதையில் கொலை செய்தது என தெரிந்து போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பாருங்க:  பிரியா ஆனந்த் பாராட்டிய க/பெ ரணசிங்கம்