இரண்டு மூன்று நாட்களாக சமூக வலைதளத்தில் கொடிகட்டி பறப்பது சர்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா பசுபதியை சைக்கிளில் ஏற்றி செல்லும் காட்சிதான். இந்த ஒரு காட்சியை வைத்து மீம்ஸை அனைவரும் தெறிக்க விடுகிறார்கள் என தான் சொல்ல வேண்டும்.
அந்த ஒரு காட்சியில் இருவரும் சைக்கிளில் சென்றது போன்ற காட்சியை வைத்து அனைத்து தரப்பு விசயங்களுக்கும் மீம்ஸ் கிரியேட் செய்துவிட்டனர் ரசிகர்கள்.
இந்த நிலையில் எல்லோரும் செய்தது போதாது என்று இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் அது போல ஒரு நக்கல் கலந்த கமெண்ட்டோடு தனது படத்தை வெளியிட்டுள்ளார்.