ரஞ்சித் இயக்கும் ஆர்யா பட பர்ஸ்ட் லுக் எப்போது

ரஞ்சித் இயக்கும் ஆர்யா பட பர்ஸ்ட் லுக் எப்போது

கபாலி, காலா, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் , இயக்குனர் ரஞ்சித் ஆவார். இவரின் படங்களை பலர் புகழ்வது ஒரு பக்கம் இகழ்வது ஒரு பக்கம் என இவரின் படங்களுக்கும் பப்ளிசிட்டிக்கு பஞ்சமே இருக்காது.

இவரின் எல்லா படங்களும் எப்போதும் இரு பக்க விமர்சனத்துக்குள்ளாகும் அப்படி பரபரப்பு வாய்ந்த இயக்குனர் இவர்.

இவர் சமீபத்தில் ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். 80ஸ் பீரியட் படம் போல இருக்கும் இந்த படம் சென்னையை மையமாக கொண்டதுதான்.

ஆர்யா பாக்ஸராக இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் எதுவும் வெளியாகாத நிலையில் வரும் 2ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.